புதிய டூவீலர் உடன் ரெயின் கோட் அணிந்து முதல் கணவரின் மச்சினனுடன் இணைந்து சென்னையில் செயின் திருட்டு பணியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியில் ஒரு பெண் தனது செயினை மர்ம நபர் ஒருவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துக் கொண்டு சென்றதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் ஒரு டூவீலரில் இரண்டு பேர் வந்து செயினை பறித்துச் சென்றதை கண்டு பிடித்தனர். அதில் டூவீலரை ஓட்டியவர் ரெயின் கோட் அணிந்து இருந்ததும் தெரியவந்தது
இதனை அடுத்து அந்த பகுதியில் இரவு பகலாக வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது சிசிடிவி கேமராவில் பார்த்தது போலவே அதே டூவீலரில் இருவர் சென்று கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே அவர்களை மடக்கி விசாரணை செய்தபோது அதில் டூவீலரை ஓட்டி வந்தவர் பெண் என தெரியவந்தது
இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் விசாரித்தபோது இருவரும் உண்மையை கூறினார். டூவீலரை ஓட்டி வந்த பெண்ணின் பெயர் ரேவதி என்றும் இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது கணவரையும் பிரிந்து, முதல் கணவரின் மச்சினனுடன் இணைந்து இந்த செயின் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். செயின் திருட்டு சம்பவத்தில் ஒரு பெண்ணே ஈடுபட்டிருந்தது பெரும் அதிர்ச்சிக்கு உரிய சம்பவமாக கருதப்படுகிறது