Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து..? – ரயில்வே அறிவிப்பு!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து..? – ரயில்வே அறிவிப்பு!
, ஞாயிறு, 27 மார்ச் 2022 (10:56 IST)
சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் வில்லிவாக்கம் வழியாக செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என பல பகுதிகள் வழியாகவும் மின்சார புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை வியாசர்பாடி – வில்லிவாக்கம் இடையே ரயில் தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் வியாசர்பாடி – வில்லிவாக்கம் வழிதடத்தில் காலை 10.20 மணி முதல் மதியம் 1.20 வரை இன்று ஒருநாள் மட்டும் 3 மணி நேரத்திற்கு ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த வழிதடத்தில் இயங்கக்கூடிய 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய பிரதேசத்திலும் ஹிஜாப் சர்ச்சை! – வைரலான வீடியோவால் நடவடிக்கை!