மத்திய பிரதேசத்தில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து தொழுகை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கர்நாடகா உடுப்பி அரசு கல்லூரியில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு விதித்த தடையை அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலம் ஹரிசிங் பல்கலைகழகத்தின் வகுப்பறை ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து தொழுகை செய்யும் வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை செய்த மாணவியிடம் விசாரணை மேற்கொள்ள 5 பேர் அடங்கிய குழுவை பல்கலைகழக நிர்வாகம் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மத வழிபாட்டு வழிமுறைகளை அவரவர் வீடுகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது.