Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரம்பமானது இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு: பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்

ஆரம்பமானது இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு: பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்
, ஞாயிறு, 9 ஜனவரி 2022 (07:30 IST)
கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து போலீசார் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவ தேவை என்று யாரும் வெளியே வரக்கூடாது என்றும் முழு ஊரடங்கு இருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது
 
நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30.58 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!