Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்தில் மாற்றம்..!

Advertiesment
திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்தில் மாற்றம்..!

Siva

, செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:38 IST)
திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெற உள்ளதை அடுத்து நாளை சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
 
பிற்பகல் 3 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசாமி சாலை,ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.
 
திருப்பதி திருக்குடை ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும்போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அப்போது, வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
 
திருக்குடை ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயண குரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
 
திருப்பதி திருக்குடை ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
 
ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் நாரயணகுரு சாலை வழியாக செல்லலாம்.
 
ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
 
திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
 
ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை அடையும்போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம். 
இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ICU-வில் ரஜினிகாந்த்? ஆஞ்சியோ சிகிச்சை..! - தற்போது எப்படி இருக்கிறார்?