சென்னையில் தொழில் முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு வரும் 19ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் பிப்ரவரி 19ஆம் தேதி இந்த பயிற்சி நடைபெறுவதாகவும் சாட் ஜிபிடி மூலம் வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்துவது, செலவுகளை குறைப்பது, திறன்களை மேம்படுத்துவது ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமையான மார்க்கெட்டிங் யுக்திகளை திட்டமிடுவது, வாடிக்கையாளர்களுடன் சுமூகமான உரையாடலை மேம்படுத்துவது, வணிக செயல்திறனை துல்லியமாக கணிப்பது, தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் பங்கேற்க பங்கேற்க விரும்புவர்கள் www.editn.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதேபோல் 9080609808 மற்றும் 984169306 ஆகிய செல்போன் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது