Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆய்வாளர் சுட்டுக்கொலை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (08:22 IST)
சென்னை கொளத்தூரில் சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் மேற்பகுதியில் துளையிட்டு நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், கொள்ளைக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்களே காரணம் என்பதை சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் நாதுராம், கணேஷ் உள்ளிட்ட மூன்று ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் தான் குற்றவாளிகள் என தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னையை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டி தலைமையில் ஒரு தனிப்படை ராஜஸ்தான் சென்றது

இந்த நிலையில் ராஜஸ்தானில் குற்றவாளிகளை தனிப்படை போலிசார் நெருங்கிய நிலையில் மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை திடீரென சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இன்னொரு காவல்துறை அதிகாரி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நகைக்கொள்ளையர்களே செய்திருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக போலீஸ் ராஜஸ்தான் விரைந்துள்ளதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments