ஊரடங்கால் காதலியை பார்க்க முடியவில்லை: சோகத்தில் தற்கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்

Webdunia
புதன், 13 மே 2020 (20:30 IST)
கொரோனா வைரஸ் காராணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 40 நாட்களாக காதலியை பார்க்க முடியாத சோகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்ற 26 வயது இளைஞர் தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் அவரால் கடந்த 40 நாட்களாக காதலியை பார்க்க முடியவில்லை. 
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஹரிபிரசாத் திடீரென தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விசாரணை செய்த போது காதலியை பார்க்க முடியாத சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஹரிபிரசாத்தின் செல்போனை ஆய்வு செய்து வரும் போலீசார் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உம்முன்னு இருக்குறது சினிமாவுக்கு ஓகே!.. அரசியலுக்கு செட் ஆகுமா விஜய்?!..

காங்கிரஸ் விலகினால் திமுக கூட்டணி.. இல்லையேல் அதிமுக கூட்டணி? ஊசலாட்டத்தில் தேமுதிக?

கொடைக்கானல் டூர் போறீங்களா?!.. இத தெரிஞ்சிக்கோங்க!.. இனிமே எல்லாம் ஆன்லைன்தான்!.

பொங்கல்: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்!.. பயணிகள் அதிர்ச்

பராசக்தியையே தடை பண்ணல.. ஜனநாயகன் ஏன்?!.. குஷ்பு பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments