Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்ஸ்டாகிராம் காதலியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸில் வந்த வாலிபர்: போலீசில் சிக்கியதால் பரபரப்பு

Advertiesment
இன்ஸ்டாகிராம் காதலியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸில் வந்த வாலிபர்: போலீசில் சிக்கியதால் பரபரப்பு
, வியாழன், 7 மே 2020 (16:46 IST)
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான காதலியை அழைத்துச் செல்ல தனது நண்பர்களுடன் ஆம்புலன்சில் வந்த வாலிபர் ஒருவர் போலீசில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு என்ற பகுதியில் போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஆம்புலன்ஸை வழிமறித்து விசாரித்தபோது திருவனந்தபுரத்திலிருந்து தாங்கள் வருவதாகவும் நோயாளி ஒருவரை ஏற்றி செல்ல வந்ததாகவும், இது செஞ்சிலுவை சங்க ஆம்புலன்ஸ் என்றும் கூறியுள்ளனர். மூவரும் செஞ்சிலுவை சங்க உடையை அணிந்து இருந்ததாள் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இதனையடுத்து அந்த ஆம்புலன்சை அவர்கள் அனுமதித்தனர் 
 
இந்த நிலையில் அந்த ஆம்புலன்ஸ் அதே பகுதியில் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டே வந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ஆம்புலன்சை வழிமறித்து விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர். இதனையடுத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது மூவரில் ஒருவரான சிவாஜித் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியதால் ஊரடங்கு நேரத்தில் சாதாரண வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் தெரிய வந்தது. இதனை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறியது குறித்த வழக்கை பதிவு செய்தனர். இன்ஸ்டாகிராம் காதலியை அழைத்துச் செல்ல ஆம்புலன்சில் காதல் வந்த இளைஞரல் அந்த பகுதியில் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தான் மதுவிற்பனைக்கு மூல காரணம் – அமைச்சர் ஜெயக்குமார்