சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் எடுத்துச் சென்ற பணத்தை எப்படி திருடினோம் என்பதை கொள்ளையர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வந்த ரயில் பெட்டி ஒன்றில் ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. அந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்த கொள்ளையர்கள், சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவ்வப்போது பணம் எடுத்து செல்வதாக எங்களுக்கு தெரிய வந்தது.
அதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதியும் சென்னையில் இருந்து சேலத்திற்கு பணம் எடுத்து செல்லப்போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்த சந்திரப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நாங்கள், பணத்தை கொள்ளையடிக்க கரெக்டா ஸ்கெட்ச் போட்டோம். அதன்படி கடந்த கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி அந்த ரயிலில் சென்ற நாங்கள், திட்டமிட்டபடி ரயில் கூரையில் மேல் ஏறி, எங்களில் 2 பேர் பணமிருக்கும் ரயில் பெட்டிக்குள் நுழைந்து 5.78 கோடியை கொள்ளையடித்தோம். கொள்ளையடுத்த பணத்தை மாத்தி ஜாலியாக செலவு செய்து வந்தோம். மாட்டவே மாட்டோம் என நினைத்திருந்தோம். ஆனால் போலீஸார் எங்களை பிடித்துவிட்டனர் என கொள்ளையர்கள் கூறினர்.