Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீட் பெல்ட், செல்போன் சார்ஜிங்.. முதல்வர் இன்று ஆரம்பித்து வைத்து மின்சார பேருந்தில் என்னென்ன வசதிகள்?

Mahendran
திங்கள், 30 ஜூன் 2025 (12:29 IST)
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகள், ஐந்து பணிமனைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 
இந்த மின்சாரப் பேருந்துகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன:
 
ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும்.
 
பயணிகளின் பாதுகாப்பிற்காக, அனைத்து 39 இருக்கைகளிலும் சீட் பெல்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
அனைத்து இருக்கைகளுக்கு கீழும் சார்ஜிங் போர்ட்கள் வசதி உள்ளது.
 
பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட தனி கேமரா வசதி.
 
பாதுகாப்பிற்காக 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
 
அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக 13 இடங்களில் அவசர கால பொத்தான்கள் உள்ளன.
 
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் சக்கர நாற்காலிகளை எளிதாக ஏற்றுவதற்காக சாய்வு பலகை வசதி உள்ளது.
 
பேருந்து நிறுத்தங்களின் விவரங்களை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில், பேருந்துக்குள் எல்.இ.டி. அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பரிதாப பலி..!

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments