சென்னை - ராமேஸ்வரம் 7.5 மணி நேரத்தில்.. விரைவில் தொடங்குகிறது வந்தே பாரத் ரயில் சேவை..

Mahendran
வெள்ளி, 28 நவம்பர் 2025 (10:42 IST)
ஆன்மீக தலமான ராமேஸ்வரத்திற்கு சென்னை எழும்பூரில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த சேவை அடுத்த மாதம் இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட வாய்ப்புள்ளது.
 
தற்போதுள்ள ரயில்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் எடுக்கும் நிலையில், புதிய வந்தே பாரத் ரயில் வெறும் 7.5  மணி நேரத்தில் பயணத்தை நிறைவு செய்யும் என உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 
சென்னை - ராமேஸ்வரம்: அதிகாலை 5.30 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு, திருச்சி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
 
ராமேஸ்வரம் - சென்னை: பிற்பகல் 2.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
 
தெற்கு ரயில்வே அதிகாரிகள் ராமேஸ்வரம் மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அதிவேக ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச் சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments