Publish Date: Wed, 19 Jan 2022 (13:23 IST)
Updated Date: Wed, 19 Jan 2022 (13:24 IST)
பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறான கருத்துகள் கடந்த சில வருடங்களாக மிக அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை பூக்கடை காவல் ஆய்வாளர் சேகர் என்பவர் சீருடை பணியாளர் நடத்தை விதிகளை மீறி சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்ததாக புகார் வந்தது
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை பூக்கடை காவல் உதவி ஆய்வாளர் சேகரை பணி இடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்த உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது