Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம சிறுவன்! – விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (14:09 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்மமாக சுற்றி திரிந்த சிறுவனை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சிறுவன் ஒருவர் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி போலீஸார் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் மெட்ரோ ரயில் நிலையத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே சுற்றி வந்துக் கொண்டிருந்தது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சிறுவனை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். சிறுவன் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவன் என்றும், வீட்டில் சண்டையிட்டு கொண்டு வெளியே வந்து விட்டதாகவும், வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள்ளேயே சுற்றி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் யார் என விசாரித்து அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். சாப்பிடாமல் சுற்றி திரிந்த சிறுவனுக்கு சுவையான பிரியாணி வாங்கி கொடுத்த போலீஸார், பெற்றோர் வந்ததும் அவர்களிடம் சிறுவனை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அதிமுகவில் நீக்கம்! அறிவாலயத்தில் அன்வர் ராஜா! - அதிமுக மீது கடும் விமர்சனம்!

கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்.. காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments