அசாம் மாநிலத்தில் டிராபிக் போலிஸ் போல உடையணிந்து வந்து டிராபிக் போலீஸுடனே பண வசூலில் நபர் ஒருவர் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள சோனிட்பூர் மாவட்டத்தின் டெஸ்புரா நகரில் போக்குவரத்து காவலர்கள் வழக்கமான காவல் பணிகளில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பேருந்தில் டிராபிக் இன்ஸ்பெக்டர் உடையில் ஒருவர் வந்துள்ளார்.
சக டிராபிக் போலீஸிடம் தான் அவர்களது மூத்த அதிகாரி என கூறியுள்ளார். டிராபிக் காவலர்களும் அதை நம்பியுள்ளனர். டிராபிக் காவலர்களுடனே நின்ற அந்த நபர் வாகனங்களை நிறுத்தி அபராதம் வசூலித்து வந்துள்ளார்.
ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் சக டிராபிக் காவலர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அவ்விடம் விரைந்து வந்த டிராபிக் காவல் உயரதிகாரிகள் போலி டிராபிக் போலீஸை பிடித்து விசாரித்துள்ளனர். உண்மையான டிராபிக் போலீஸ் போலவே வந்து ஆசாமி பண வசூலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.