Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புகார் கொடுக்க வந்தவரை அரை நிர்வாணப்படுத்திய போலீஸ்: சென்னையில் கொடூரம்

Advertiesment
புகார் கொடுக்க வந்தவரை அரை நிர்வாணப்படுத்திய போலீஸ்: சென்னையில் கொடூரம்
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (09:27 IST)
சென்னையில் புகார் கொடுக்க வந்த நபரையே போலீஸார் அடித்து கொடுமை படுத்தியதோடு அவரை அரைநிர்வாணப் படுத்தி கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ்குமார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் கீதா என்ற பெண்மணி ரமேஷ் வீட்டு மெட்ரோ வாட்டர் கனெக்‌ஷ்னை திருட்டுத்தனமாக பயன்படுத்தி வந்தார்.
 
இதனையறிந்த ரமேஷ் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் கீதா மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ், மாறாக புகார் கொடுத்த ரமேஷையும் அவரது மகனையும் அரை நிர்வாணமாக்கி காவல் நிலையத்தில் அமரவைத்த்து கொடுமைபடுத்தினர்.
 
இதுகுறித்து ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், பாதிக்கப்பட்ட ரமேஷிடம் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரமேஷுக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்கு சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி 30,000 ரூபாய் அபராதமாக தர வேண்டும் என உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவான்மியூர் பீச்சில் தாக்கப்பட்ட கதிரவன் மரணம்– மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது கொலை வழக்கு