வடசென்னை முதல் பாகத்தை அடுத்து தனுஷ் வெற்றிமாறன் இணைந்து குறுகிய காலத்தில் ஒரு படத்தினை எடுத்து வெளியிட உள்ளனர். அந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது.
வெற்றிமாறனின் கனவுப் படமான வடசென்னைப் படத்தின் முதல் பாகம் நாளை மறுநாள் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களுக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கிடையில் குறுகிய காலத்தில் ஒரு படத்தினை எடுத்து வெளியிட வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி முடிவு செய்துள்ளனர்.
சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை என்ற நாவல்தான் வெற்றிமாறன் தனுஷ் இணையும் அடுத்த படமாகும். இரண்டு கதாபாத்திரங்களே கதையின் முழுவதும் பயணிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் தனுஷே பொறுப்பேற்க இருக்கிறார். படத்தின் பெயர், படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.