தமிழக சட்டசபையில் அறிவித்தப்படி இன்று முதல் சென்னை அருகேயுள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த 12 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்கள் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் அப்போதைய பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளாக இருந்த பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, கலைஞர் சாலை ஆகிய நான்கு இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டன.
ஆனால் தற்போது அவை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில் தொடர்ந்து சுங்கசாவடிகள் செயல்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் மெட்ரோ பணிகள் தொடங்கப்படுவதால் இந்த சுங்கசாவடிகள் செயல்படாது என சட்டசபையில் அமைச்சர் ஏ.வெ.வேலு கூறியிருந்தார்.
அதன்படி இன்றுமுதல் மேற்கண்ட 4 சுங்க சாவடிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.