Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் : வீடு ஜப்தி?

Advertiesment
நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் : வீடு ஜப்தி?
, புதன், 21 பிப்ரவரி 2018 (16:35 IST)
15 ஆண்டுகளாக சொத்து வரி கட்டாத காரணத்தினால் தமிழ் நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 
80களில் இளம் பெண்களின் நாயகனாக திரைத்துறையில் வலம் வந்தவர் நடிகர் ராம்கி. நடிகை நிரோஷாவுடன் ஏராளமான படங்களில் நடித்த வர் அவரையே திருமணம் செய்து கொண்டு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.
 
சில வருடங்களாக சினிமாவில் தலை காட்டாத அவர் சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 13 வருடங்களாக 1.17 லட்சம் சொத்துவரி செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ராம்கி தரப்பில் இருந்து வரி செலுத்தப்படவில்லை.
 
எனவே, தற்போது சென்னை மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரத்திற்குள் வரியை செலுத்தவில்லை எனில் வீடு ஜப்தி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா அவமதித்த கனடா பிரதமரை தமிழகம் விருந்துக்கு அழைக்க வேண்டும். சீமான்