Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கியில் 15 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை

Advertiesment
வங்கியில் 15 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை
, ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (11:31 IST)
மோடியின் பணமதிப்பிழப்பு(DEMONITISATION) நடவடிக்கையின் போது வங்கியில் ரூ.15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் மக்களிடம் பேசிய மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். கருப்புபணத்தை மீட்கவும், தீவிரவாதக் குழுக்களிடம் உள்ள பணத்தை கட்டுப்படுத்தவும் இந்த திட்டத்தை அறிவிப்பதாக மோடி கூறினார்.  மக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என அறிவித்தார். இதனால் பொதுமக்களும், சிறு குறு தொழிலாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏராளமானோர் வங்கியில் ரூ.15 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்தனர். அவ்வாறு அதிகமான தொகையை வங்கியில் டெபாசிட் செய்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நோட்டீசுக்கு பதில் அளிக்காமல் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் பயணியை கொன்ற திருநங்கை தற்கொலை முயற்சி