சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள் அவதி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது என்பது தெரிந்ததே. சாலை வழிகளில் சென்றால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் நீண்ட நேரம் ஆகும் என்பதால் பெரும்பாலானோர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் பகுதியில் ரயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிகிறது
இந்த பகுதியில் 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரை மணி நேரமாக எந்தவிதமான ரயில் போக்குவரத்தும் இல்லை என்பதால் பயணிகள் பெரும் அவதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது