விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

Siva
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (18:16 IST)
விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாளை அதாவது ஆகஸ்ட் 29 அன்று சென்னை மெட்ரோ ரயில்கள், சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, ரயில்கள் வழக்கமான நாட்களை விட மாறுபட்ட கால இடைவெளியில் இயக்கப்படும்.
 
மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை ரயில்களின் சேவை நேரம் பின்வருமாறு:
 
காலை மற்றும் மாலை நேரங்கள்  காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
 
மற்ற நேரங்களில் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
 
இந்த ஏற்பாடு, விடுமுறை நாளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments