சென்னையில் 8 மாடிக் கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்.. வெளிநாட்டு பாணியில் அசத்தல் திட்டம்..!

Mahendran
சனி, 4 அக்டோபர் 2025 (16:59 IST)
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சோழிங்கநல்லூரில் ஒரு பிரம்மாண்டமான உயர்மட்ட ரயில் நிலையம் அமைய உள்ளது. இது  மாதவரம் - சிப்காட் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களும் சந்திக்கும் இணைப்பு முனையமாக செயல்படும்.
 
இந்த நிலையத்தின் நுழைவாயில் அருகே 8 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் கட்டப்படவுள்ளது. ரயில் பாதைகள் இந்த கட்டிடம் வழியாகவே செல்லும் என்பது இதன் சிறப்பு.
 
5-வது வழித்தட நடைமேடை சாலையில் இருந்து 28.8 மீட்டர் உயரத்திலும், 3-வது வழித்தட நடைமேடை 21.8 மீட்டர் உயரத்திலும் அமையவுள்ளது.
 
வெளிநாட்டு பாணியில் அமைய இருக்கும் இந்த நிலையத்தின் வடிவமைப்பு, மேலே இருந்து பார்க்கும்போது இரண்டு வழித்தடங்கள் குறுக்காகக் கடக்கும் பிளஸ் (+) குறியீடு போலக் காட்சியளிக்கும். 8 மாடிக் கட்டிடத்தில் முதல் தளம் வாகன நிறுத்துமிடமாகவும், 6 முதல் 8-வது மாடிகள் வரை மெட்ரோ அலுவலகம், கடைகள் போன்ற வசதிகளுடன் அமையவுள்ளது.
 
சோழிங்கநல்லூர் நிலையம் போலவே, அருகிலுள்ள துரைப்பாக்கம் ரயில் நிலையமும் இதேபோன்ற சிறப்பம்சங்களுடன் கட்டப்படவுள்ளது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments