நாளை சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (15:18 IST)
தமிழகத்தில் மழைக்காலம்,குளிர் காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் தென் தமிழகத்தில் நாளை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதேபோல் வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் குறிப்பாக இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே சமயத்தில் உள் தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை மட்டும் லேசான பனிமூட்டம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் மட்டும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டின் மூலம் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றதா? ராகுல் காந்திக்கு பாஜக கேள்வி..!

அமித்ஷாவின் அடிமையாகிவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. நகை வியாபாரிகள் அதிர்ச்சி..!

வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சி அடைந்துள்ளேன்: காசா விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

அமித்ஷா - எடப்பாடியார் சந்திப்பால் திமுக பதறுகிறது! - தமிழிசை சௌந்தர்ராஜன்!

அடுத்த கட்டுரையில்
Show comments