Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: மேயர் ப்ரியா தகவல்..!

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (15:13 IST)
சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் பெண்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்றும் இதற்காக பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார் 
 
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சி அமைக்கப்படும் என்றும் இதற்காக 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார் 
 
மேலும் சென்னை பட்ஜெட் உள்ளதா சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 
 
200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
 
255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.7.46 கோடி ஒதுக்கீடு
 
பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.61 லட்சம் ஒதுக்கீடு.
 
மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ 45 லட்சம் ஒதுக்கீடு.
 
சென்னை ராயப்பேட்டையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
 
419 சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் வகையில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு.
 
சென்னையில் 8 நீர்நிலைகளை ரூ.10 கோடி செலவில் புனரமைக்க திட்டம்.
 
எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 2 சீருடை வழங்க ரூ. 8.50 கோடி ஒதுக்கீடு.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments