Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (16:53 IST)
இன்னும் சில மணி நேரங்களில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது 
 
இந்த நிலையில் வங்க கடலில் புதிய புயல் தோன்றியுள்ளது அடுத்து மேலும் கூடுதலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் பின்வரும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை பெய்யும் மாவட்டங்கள் இதோ: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கனழை பெய்யவாய்ப்புள்ளது.
 
 அதேபோல் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?

எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்: லட்டு விவகாரம் குறித்து குஷ்பு..!

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

மக்களுக்கு ஷாக் நியூஸ் - “சென்னையில் மீண்டும் உயரும் சொத்து வரி”..!

சீனாவின் இந்த ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? உலக நாடுகள் பதற்றமடைவது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments