வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் முக்கிய சாலைகலில் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது.
தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிவர் புயலால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் நீர்தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் முக்கிய சாலை பகுதிகளில் வாகனங்கள் அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.