Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே நிரம்பிய ஏரிகள்

வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே நிரம்பிய ஏரிகள்
, வியாழன், 21 அக்டோபர் 2021 (10:41 IST)
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் 85% நிரம்பியுள்ளன. 

 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. எனினும் தமிழகத்தின் அதிகபட்ச நீர் தேவைகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் வடகிழக்கு பருவமழை மூலமாகவே கிடைக்கிறது.
 
இந்நிலையில் இந்த மாதம் தொடக்கமே தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை காலதாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது அக்டோபர் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் யாவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்ட உள்ளன. ஆம், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் 85% நிரம்பியுள்ளன. தற்போதுள்ள நீர் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
புழல் ஏரி: 
மொத்த கொள்ளளவு -3,300 மி. கன அடி, நீர் இருப்பு - 2,772 மி. கன அடி, நீர்வரத்து - 23 கன அடி, நீர் வெளியேற்றம் -189 கன அடி
 
செம்பரம்பாக்கம் ஏரி: 
மொத்த கொள்ளளவு - 3,645 மி. கன அடி, நீர் இருப்பு - 2,789 மி. கன அடி, நீர்வரத்து - இல்லை, 
நீர் வெளியேற்றம் -148 கன அடி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித குல வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள்