ஐக்கிய நாடுகளின் அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோ, சென்னை நகரை சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இணைத்துள்ளது. இதற்காக யுனெஸ்கோவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்
கிரியேட்டிவ் சிட்டீஸ் என்று கூறப்படும் படைப்பாக்க நகரங்கள் பட்டியலை யுனெஸ்கோ அமைப்பு தயாரித்து வருகிறது. அதில் பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்புக்கு கௌரவம் தெரிவிக்கும் வகையில் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையை இந்த ஆண்டு யுனெஸ்கோ இணைத்துள்ளது. இது சென்னை மக்களுக்கு கிடைத்த உலகளாவிய கெளரவமாக பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு கிடைத்த கெளவரம் குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'பாரம்பர்ய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம் பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. இது நமது நாடே பெருமைகொள்ளும் தருணம்' என்று கூறியுள்ளார். ஜெய்ப்பூர், மற்றும் வாரணாசி ஆகிய இந்திய நகரங்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.