Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவன் - மனைவி சண்டையால் சென்னையில் தரையிறங்கிய கத்தார் விமானம்

Advertiesment
கணவன் - மனைவி சண்டையால் சென்னையில் தரையிறங்கிய கத்தார் விமானம்
, செவ்வாய், 7 நவம்பர் 2017 (11:35 IST)
கணவன் மனைவி குடும்ப சண்டையால் கத்தாரில் இருந்து இந்தோனேஷியா சென்று கொண்டிருந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.


 
 
கத்தாரில் இருந்து இந்தோனேஷியா சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் கணவன், மனைவி பயணம் செய்தனர். விமானம் கிளம்பியவுடன் கணவன் தூங்கிவிட்டதால் அவருடைய மனைவி கணவரின் செல்போனை ஒப்பன் செய்து பார்த்துள்ளார்
 
அப்போது தனது கணவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தது அவருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கணவரை எழுப்பி சண்டை போட்டார். அவருடைய கூச்சல் காரணமாக மற்ற பயணிகளின் தூக்கத்திற்கு இடைஞ்சல் ஆனது.
 
இதுகுறித்து சமாதானம் செய்ய வந்த விமான அதிகாரிகளையும் அந்த பெண் திட்டியதோடு, உடனே விமானத்தை தரையிறக்குமாறும் சண்டை போட்டார். மற்ற பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விமானத்தை இறக்க விமான அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போது விமானம் சென்னை அருகே பறந்து கொண்டிருந்ததால் சென்னை விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சென்னையில் தரையிறக்கப்பட்டது,. பின்னர் கணவன், மனைவி இருவரையும் இறக்கிவிடப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் கிளம்பியது.
 
சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்தபோதிலும் அந்த பெண் மீது விமான நிலைய அதிகாரிகள் எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவுஜீவிகளின் ஆலோசனையே மோடி-கருணாநிதி சந்திப்பு - கொளுத்திப்போடும் சுவாமி