Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் மருந்து : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பயன்படுத்த முடிவு

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (16:08 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்தை பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ள சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே முன்னதாக வேறு சில வைரஸ் தாக்குதலுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எபோலா வைரஸ் தொற்றிற்கு மருந்தாக அமெரிக்க நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துதான் ரெம்டெசிவிர். தற்போது இந்த மருந்து ஓரளவு கொரோனாவை குணமாக்குவதாக கூறப்படுவதால் பல நாடுகள் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முன் வந்துள்ளன.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்ஹி மருத்துவமனையில் மட்டும் ரெம்டெசிவிர் மருந்தை சோதனை முயற்சியாக நோயாளிகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து 31% கொரோனா நோயாளிகளை குணமாக்குவதாக அமெரிக்க சுகாதார துறை தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியில் ரெம்டெசிவிர் நல்ல பலனை கொடுத்தால் பரவலாக அது பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

காக்கிச் சட்டை போட்ட எமனுக: அஜித்குமார் மரணம் குறித்து நடிகர் தாடி பாலாஜி..!

அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை: மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments