Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல.. வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

Mahendran
வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:14 IST)
ஆபாச படங்களை பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் ஆபாச படங்களை பார்ப்பது தவறல்ல என்றும் அந்த படங்களை பிறருக்கு பகிர்ந்தால் மட்டுமே சட்டப்படி தவறு என்றும் கூறி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  
 
ஆபாச படங்கள் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கருத்துக்கணிப்பு ஒன்று கூறப்படும் நிலையில் சென்னையில் ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ஆபாச படங்களை ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும் அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்