Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
, புதன், 17 ஜூன் 2020 (13:30 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஐந்து கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜூன் 19ஆம் தேதி முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது தான்
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி இமானுவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்த இமானுவேல் என்பவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 
 
அதுமட்டுமின்றி வழக்கு தொடர்ந்த இமானுவேலுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொது மக்களை காப்பதற்காக மாநில அரசும் மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் விளம்பரத்திற்காக இந்த வழக்கை பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக வழக்கை தள்ளுபடி செய்து அபராதமும் விதித்து உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Google Pixel 4a என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்..?