Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோல்வி அடைந்த மாணவி மீண்டும் தேர்வு எழுத சென்னை ஐகோர்ட் உத்தரவு

Advertiesment
தோல்வி அடைந்த மாணவி மீண்டும் தேர்வு எழுத சென்னை ஐகோர்ட் உத்தரவு
, திங்கள், 21 மே 2018 (18:19 IST)
உடல்நலக்குறைவுடன் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தேர்வு எழுதி மூன்று பாடங்களில் தோல்வி அடைந்த நிலையில் அந்த மாணவிக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை கேகே நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்த ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர் மாணவி ஷரோன் நிவேதிதா. இவர் தேர்வு சமயத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேர்வு எழுதினார். இதனால் இவர் மூன்று பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை
 
webdunia
இந்த நிலையில் தனக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் உடல்நலக் குறைவால் 3 பாடத் தேர்வில் தோல்வியடைந்த 11ஆம் வகுப்பு மாணவி ஷரோன் நிவேதிதா மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லையில் தங்கச் சுரங்கம்; இது எங்கள் உரிமை; சீனா அதிரடி