சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது குற்றம் காட்டப்பட்ட நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்கல்வித்துறை செயலாளரின் பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசிடம் விளக்கம் கேட்டது ஏன் என துணைவேந்தருக்கு நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்
முன்னதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குயதில் முறைகேடு நடந்ததாக பதிவாளர் தங்கவேலு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அளவுக்கு அதிகமாக கணினிகள் வாங்கியதாகவும், அதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்த தமிழக அரசு, பதிவாளர் தங்கவேலுவைப் சஸ்பெண்ட் செய்ய பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு உத்தரவிட்ட நிலையில் தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.