Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு: இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (07:45 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படவில்லை என்பதும் அதன் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மின்சார ரீடிங் எடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
ஆனால் ஊரடங்கு தளர்த்தப் பட்ட பின் எடுக்கப்பட்ட ரீடிங்கில் பல மடங்கு மின் கட்டணம் அதிகமாக வந்ததாக பரவலாக புகார் எழுந்தது. இதுகுறித்து நடிகர் நடிகைகள் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணையின் போது அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது 
 
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளிவர இருப்பதால் அந்த தீர்ப்பு தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments