உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என வேலூர் நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று பட்டியலில் இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது