அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் அதில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்ட நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.