Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊட்டிக்கு போனா இனிமே அது கிடைக்காது – உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊட்டிக்கு போனா இனிமே அது கிடைக்காது – உயர்நீதிமன்றம் உத்தரவு
, ஞாயிறு, 23 ஜூன் 2019 (12:51 IST)
தமிழ்நாட்டின் முக்கியமான மலைப்பகுதியாகவும், சுற்றுலா தளமாகவும் விளங்கும் பகுதி ஊட்டி. வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டே இருக்கும் ஊட்டி தற்போது சுற்றுசூழல் மாசுப்பாடு அடைந்து வருகிறது.

சுற்றுலா வரும் பயணிகள் தாங்கள் உபயோகித்த பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை சாலையோரங்களில் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஊட்டி பகுதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டில்தான் உள்ளது.

ஊட்டி தொடர்ந்து மாசுபடுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஊட்டியின் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட உள்ளது.

இதன்படி ஊட்டி அருகில் உள்ள ஊர்களான கக்கநள்ளா, குஞ்சப்பணை, தாளூர், சோலாடி முதலிய ஊர்களில் உள்ள கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், சூப்பர் மார்க்கெட் உட்பட பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், உணவு பொருட்கள், குளிர்பானங்கள் இதர பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட உள்ளது.

மேலும் பயணிகளும் ஊட்டிக்குள் நுழையும்போது எந்தவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்து வர கூடாது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15 சுதந்திர தினம் முதல் அமலுக்கு வரு இந்த உத்தரவை மீறினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருந்தாலும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இவ்வளவு குசும்பு ஆகாது!!!!