Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லிப்டில் ஏற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள்.. பார்க்கிங் பிளேஸ் ஆன மொட்டை மாடி..!

Advertiesment
லிப்டில் ஏற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள்.. பார்க்கிங் பிளேஸ் ஆன மொட்டை மாடி..!

Mahendran

, செவ்வாய், 15 அக்டோபர் 2024 (13:02 IST)
சென்னையில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார் வைத்திருக்கும் நபர்கள் மேம்பாலங்களில் நிறுத்தி வருகின்றனர். மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் "அபராதம் வேண்டாம்" என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மொட்டை மாடியில் லிப்ட் மூலம் வாகனங்களை ஏற்றி நிறுத்தி வருகின்றனர். இதனை அடுத்து, பல அடுக்குமாடி கட்டிடங்களின் மொட்டைமாடி தற்போது பார்க்கிங் பிளேஸ் ஆக மாறி உள்ளதாகவும், ஒரு சிலர் தங்களுடைய வீட்டுக்குள்ளேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருப்பதாகவும் புகைப்படங்களுடன் கூடிய செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளம், அதன் பின் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பாதிப்படைந்து, ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் அதை பழுது பார்க்க செலவு செய்தனர். இதனை கணக்கில் கொண்டு, தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் சுதாரித்து தங்களது வாகனங்களை பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி: நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ரத்து..! எத்தனை நாட்கள்?