Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதவை திறக்காமல்.. லாக்கரை உடைக்காமல்..! – 14 கிலோ நகை கொள்ளை!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (09:15 IST)
சென்னையில் உள்ள மொத்த நகை கடை ஒன்றில் லாக்கர் உடைக்காமலே நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சௌகார்பேட்டை பகுதியில் நகைகள் செய்து விற்பனை செய்து வரும் நகைக்கடை ஒன்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தங்க நகைகளை சொந்தமாக டிசைன் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வரும் இந்த கடை வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நகைகள் விற்பனை செய்யப்பட்டு பூட்டப்பட்ட பின்னர் நேற்று கடையை திறந்திருக்கிறார்கள். லாக்கரை திறந்தபோது அதிலிருந்து தங்க நகைகள் மாயமானதை கண்டு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். கதவு மற்றும் லாக்கர்களை உடைக்காமல் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பதால் கொள்ளையர்கள் திருட்டு சாவி பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருடு போன மொத்த தங்கத்தின் எடை 14 கிலோ என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments