Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி சென்ற மாணவி பலாத்காரம்; காட்டிக் கொடுத்த வயிறு! – சிக்கிய இளைஞன்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:51 IST)
ராமநாதபுரத்தில் பள்ளி சென்ற மாணவியை தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த 27 வயதான ஸ்டீபன் ராஜ் என்பவன் சிறுமியை தினமும் தொடர்ந்து சென்றதுடன், அடிக்கடி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என அவர் மிரட்டியதால் சிறுமி இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

கிட்டத்தட்டை ஓராண்டு காலமாக இந்த கொடுமை நடந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். வயிறு பெரிதாக தொடங்கியதை கண்டு பெற்றோர் விசாரித்தபோது இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஸ்டீபன் ராஜை கைது செய்த போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்