Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சி: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:53 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த போது தங்கத்தின் விலையும் உச்சத்தில் சென்று கொண்டிருந்தது. பங்கு சந்தையில் இருந்து அனைத்து பங்குகளையும் வெளியே எடுத்த பொதுமக்கள் அதற்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவித்ததால் தங்கத்தின் விலை மிக அதிகமாக ஏறியது
 
னால் தற்போது பங்குச்சந்தை ஓரளவு சீர் அடைந்ததை அடுத்து தற்போது தங்கத்தை விற்பனை செய்து மீண்டும் பங்குச் சந்தைகளில் பொதுமக்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்தது
 
இந்த நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ ரூ.208 குறைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.37,464க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,683க்கு விற்பனையாகிறது 
 
பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் தங்கத்தை வாங்கும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments