சென்னையை சேர்ந்த சுவேதா(24) என்ற இளம்பெண், ஜப்பானில் நடந்த உலக விசில் மாநாட்டில் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளில் முதல் பரிசை பெற்றுள்ளார்.
இளம் வயதிலிருந்தே விசில் அடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் சுவேதா. இவர் சென்னையில் விசுவல் கம்யூனிகேசன் படித்தவர். மேலும், எடிட்டிங், சவுண்ட் டிசைன் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். சினிமா பின்னணி பாடகியும் கூட. பல சினிமா பாடல்களை விசில் மூலமே பாடும் திறமை பெற்றவர். பல விசில் கச்சேரிகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.
சிறுவயதில் இருந்தே விசில் அடிப்பதில் ஆர்வம் கொண்ட சுவேதா, தொடர்ந்து 18 மணி நேரம் விசிலடித்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கடுமையான மூச்சு பயிற்சியின் மூலம் அவர் சாதனைகளை செய்து வருகிறார். இந்த திறமை காரணமாக, அவருக்கு தமிழ் சினிமாவில் பாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற விசில் மாநாட்டில் கலந்து கொண்ட சுவேதே, 2 பிரிவுகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியவர் இவர்தான்.