உதயநிதியிடம் ரூ.1900 கொரோனா தடுப்பு நிதி கொடுத்த சிறுமி: பெற்றோருக்கு பாராட்டு!
சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த ஆயிரத்து 900 ரூபாயை உதயநிதியிடம் கொரோனா தடுப்பு நிதியாக அளித்ததை அடுத்து அந்த சிறுமிக்கும் அவருடைய பெற்றோருக்கும் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இன்று தொகுதியை ஆய்வு செய்தார். அப்போது சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தான் சேர்த்து வைத்திருந்த ஆயிரத்து 900 ரூபாய் கொரோனா தடுப்பு நிதியாக அளித்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த சிறுமி P.R.யுவஸ்ரீ, தனது சேமிப்புப்பணம் ரூ.1900-ஐ முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக என்னிடம் வழங்கினார்.அது முதல்வர் அவர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிறு வயதிலேயே சேவைநோக்குடன் செயல்பட்ட யுவஸ்ரீக்கு எனது அன்பும்-வாழ்த்தும்
அவரது பெற்றோர் P.S.ராமகிருஷ்ணன் - P.R.சுனிதா தம்பதிக்கு எனது நன்றி. இந்த நிகழ்வின் போது மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள், சேப்பாக்கம் பகுதி செயலாளர் அண்ணன் மதன்மோகன் அவர்கள், வட்ட செயலாளர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் உடனிருந்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.