Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு மழை வந்தாச்சு... 6 மாத காத்திருப்பு ஓவர்!!

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (15:34 IST)
6 மாத காத்திருப்புக்கு பலன் தரும் விதமாக இன்று சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
இன்னும் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் 23 ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் குறைந்து மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையல் அறிவித்திருந்த நிலையில், அதை கேட்டு சென்னைக்கு எப்போது மழை வரும் என ஆறு மாதங்களாக காத்திருந்த சென்னைவாசிகள் தற்போது மழையை ஜாலியாக ரசித்து வருகின்றனர். 
 
கத்திரி வெயில் துவங்கியதற்கு முன்னர் இருந்தே ஆட்டத்தை காட்டி வெப்பம் தணிந்து இப்போது சென்னையின் சில பகுதியில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 
மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல் மழையும் திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
 
இதே போன்று மழை இன்னும் சில நாட்களுக்கு சென்னையில் தொடர்ந்தால் வெப்பத்தில் இருந்தும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து மக்கள் விடுபடுவார்கள் என நம்பலாம். 

தொடர்புடைய செய்திகள்

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments