Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா பாணியில், சினிமா ஃபைனான்சியரிடமே காரை திருடிய கும்பல்: நடந்தது என்ன??

Advertiesment
சினிமா பாணியில், சினிமா ஃபைனான்சியரிடமே காரை திருடிய கும்பல்: நடந்தது என்ன??
, வியாழன், 20 ஜூன் 2019 (11:35 IST)
சென்னையில் திரைப்பட பாணியில், இன்னோவா காரை விற்பனை செய்து அதை வாங்கியவரிடமே மீண்டும் திருடிய கும்பலை, போலீஸார் கைது செய்துள்ளனர்.

பல தமிழ் திரைப்படங்களில் ஒரு பொருளை விற்பனை செய்து அதை வாங்கியவரிடமே, மீண்டும் அன்றைக்கு இரவே,அதை விற்பனை செய்தவரே அனுப்பி கும்பல், அதை திருடி வருவது போல் பல காட்சிகள் பார்த்திருப்போம்.

ஆனால் நிஜ வாழ்வில் அதே திரைப்பட பாணியில் ஒரு திருட்டு கும்பல் ஒரு திரைப்பட ஃபைனான்சியரிடமே தன் கைவரிசையை காட்டியிருக்கிறது.

சென்னை மதுரவாயிலைச் சேர்ந்த திரைப்பட ஃபைனான்சியர் தணிகை. இவர், இணையத்தில் ஒரு இன்னோவா கார் விற்பனை விளம்பரத்தைப் பார்த்து அதே காரை வாங்க ஆசைப்பட்டுள்ளார்.

அந்த கார் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டு ஆறு லட்சம் மதிப்புள்ள இன்னொவா காரை விலைக்கு வாங்கினார். அந்த காரை வாங்கிய மூன்று நாட்கள் கழித்து தன்னுடைய கானத்தூர் சொகுசு பங்களாவிற்கு அந்த காரில் சென்றுள்ளார் தணிகை.

அந்த சொகுசு பங்களாவில் நிறுத்திவைக்கப்பட்டிடுந்த கார், அன்று இரவிலேயே காணாமல் போயிருக்கிறது. இது குறித்து கானத்தூர் போலீஸிடம் தணிகை புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார், கார் திருடு போன பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலமும், அந்த பகுதியில் பயன்படுத்தப் பட்ட செல்ஃபோன் அழைப்புகளையும் வைத்து திருடியவர்களை கண்டுபிடித்து காரை மீட்டுள்ளனர்.

கார் மீட்கப்பட்ட தகவலை அறிந்து காவல் நிலையத்திற்கு வந்த திரைப்பட ஃபைனான்சியர் தணிகை, கைது செய்யப்பட்ட திருடர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தணிகையிடம் கார் விற்றவர்கள் தான் அந்த காரை திருடியும் இருக்கிறார்கள். இதனை அறிந்த போலீஸாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது செய்யப்பட்ட திருடர்களான கணேஷ், பாரதியுடன் சேர்ந்து ரிச்சர்ட், சத்யா ஆகியவர்களும் விற்கப்பட்ட காரை திருடி வேறொருவரிடம் விற்க முயன்றிருக்கிறார்கள். அந்த நால்வரில் கணேஷ் மற்றும் பாரதி தான் தணிகைக்கு இன்னோவா கரை விற்றிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு இதே இன்னோவா காரை நெய்வேலியில் உள்ள ஒருவருக்கு விற்றிருக்கின்றனர். பின்பு அதே காரைத் திருடி வேலூரில் ஒருவருக்கு விற்றிருக்கின்றனர். பின்பு அவரிடமிருந்து திருடி தான் தணிகைக்கு விற்றிருக்கின்றனர்.

கணேஷ், பாரதி, ஆகிய இருவரை மட்டும் தற்போது போலீஸார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாகிய ரிச்சர்ட் மற்றும் சத்யா ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் இணையத்தில் விற்பனைக்கு வரும் பொருட்கள், விலை குறைவாக இருக்கிற காரணத்தாலேயே, ஆசை பட்டு இது போன்ற கும்பலகளிடம் மாட்டி கொள்ளவேண்டாம் எனவும் தணிகைக்கு காவல் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட்மி என்னடா ரெட்மி... இந்தியாவில் மாஸ் காட்டிய ஒப்போ!!!