Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் ஈ.வே.ரா சாலை பெயர் மாற்றம்! – பெரியாரிய ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (11:00 IST)
சென்னையில் உள்ள பெரியார் ஈ.வே.ரா சாலையின் பெயரை தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கிமீ நீளமுள்ள பிரதான சாலை பூத்தமல்லி ஹை ரோடு என்றும், பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய பிரதான சாலையான இந்த சாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தமிழக நெடுஞ்சாலை துறை இணையதளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இந்த பெயர் மாற்றத்திற்கு பெரியாரிய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments