Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னைக்கு காத்திருக்கும் கனமழை; உதவி எண் அறிவித்த சென்னை மாநகராட்சி!

Advertiesment
சென்னைக்கு காத்திருக்கும் கனமழை; உதவி எண் அறிவித்த சென்னை மாநகராட்சி!
, வியாழன், 18 நவம்பர் 2021 (08:18 IST)
இன்று முதல் சென்னையில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர உதவி எண் குறித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்கள் முன்னதாக சென்னையில் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. சில நாட்களாக இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

நாளை வரை கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி “சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது; பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாவது டோஸ் போட முக்கியத்துவம்..! – தொடங்கியது மெகா தடுப்பூசி முகாம்!