Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போகி நாளன்று பழைய பொருட்களை எரிக்க தடை!

Advertiesment
போகி நாளன்று பழைய பொருட்களை எரிக்க தடை!
, சனி, 7 ஜனவரி 2023 (09:24 IST)
போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருவதால் முந்தைய தினங்கள் விடுமுறையாக இருப்பதால் பலரும் சொந்த ஊர்களுக்கு 12, 13 ஆம் தேதிகளிலேயே புறப்பட தயாராகி வருகின்றனர்.

சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து பல்வேறு வழித்தடங்களிலும் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 1.62 லட்சம் பேர் பயணிப்பதற்காக முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றாலும் சென்னைவாசிகள் போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக பழைய துணி, டயர், டியூப், ப்ளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பொருட்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அதனை எரிக்காமல் தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் காணப்பட்ட UFO? தெருவிளக்கு UFO ஆனது எப்படி??